
Tamil Nadu
டெல்டா மாவட்டங்களில் முதல்வர் 2 நாட்கள் ஆய்வு: எதற்காக தெரியுமா?
காவேரி, டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையை கடந்த 24-ஆம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
இந்நிலையில் அதிகபட்சமான இடங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 ஆயிரம் கி.லோ மீட்டர் தூர்வாரும் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
இந்நிலையில் காவேரி, டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நாளை காலை சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் முதல்வர் அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை செல்கிறார்.
அங்கு வடிகால். தூர்வாரும் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்பது குறித்து நேரில் ஆய்வு செய்கிறார். புதுக்கோட்டையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு செல்லும் தமிழக முதல்வர் அங்கு இரவு தங்குவதாக தெரிகிறது.
இதனைதொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர்,திருச்சி போன்ற மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வில் விவசாயிகளை சந்தித்து கருத்துக்களை கேட்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
