Connect with us

வீட்டுக் கழிவு நீரை அகற்ற சென்ற ஊழியர்கள்! விஷவாயு தாக்கி உயிரிழப்பு!!

உயிரிழப்பு

செய்திகள்

வீட்டுக் கழிவு நீரை அகற்ற சென்ற ஊழியர்கள்! விஷவாயு தாக்கி உயிரிழப்பு!!

வீட்டுக் கழிவு நீரை அகற்ற சென்ற ஊழியர்கள்! விஷவாயு தாக்கி உயிரிழப்பு!!

உலகில் நாள்தோறும் புதுப்புது கண்டுபிடிப்புகள் உருவாகிக் கொண்டே வருகிறது. என்னதான் புதுப்புது கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் பல இடங்களில் மனிதர்கள் சித்திரவதைகளும், மனிதர்களால் தவிர்க்கவேண்டிய வேலைகளும் செய்யப்பட்டு தான் வருகிறது.

அவற்றுள் ஒன்றுதான் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறை. இதற்கு பல இடங்களில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இவ்வாறு கழிவுகளை அகற்றும் போது விஷவாயு தாக்கி அவை உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

இருப்பினும் இந்த முறை ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. அதன் வரிசையில் விஷவாயு தாக்கி 2 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தலைநகர் சென்னையில் நடந்துள்ளது.

அதன்படி சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது அங்கிருந்து வெளிவந்த விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஜெயக்குமார் என்பவர் வீட்டில் கழிவுநீர் அகற்ற சென்ற ஊழியர்கள் ஏழுமலை (33), ராஜேஷ் (32)ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரின் சடலங்களையும் கைப்பற்றி மணிமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top