
தமிழகம்
திருக்கோவில்களின் ஓலைச்சுவடி பராமரிக்க பணியாளர்கள் நியமனம்!!
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்பு அறநிலையத்துறை பற்றி பல்வேறு விதமான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஆயினும் அந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக எம்எல்ஏ சேகர்பாபு நியமிக்கப்பட்டார்.
அவர் நாள்தோறும் அறநிலைத்துறை மற்றும் கோவில் பற்றி தகவல்களை வெளியிட்டு கொண்டு வருவார். அந்த வகையில் இன்றைய தினம் திருக்கோவில்களில் ஓலைச்சுவடி பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவலை அளித்துள்ளார்.
அதன்படி தமிழ்நாட்டில் திருக்கோவில்களில் பனை ஓலை சுவடிகளை பராமரிக்க தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார். உலக தமிழராய்ச்சி நிறுவன சுவடியியல் துறை மூலம் பரிந்துரைக்கப்பட்ட பணியாளர்களை நியமிக்க உத்தரவு விடப்பட்டுள்ளது.
ஓலைச்சுவடிகளில் தூசியை அகற்ற சர்ஜிகல் ஆயில் பயன்படுத்துதல், மை பூசுதலில் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது .
பூச்சிகளிடம் காக்க லெமன் ஆயில் தடவுதல், சுவடிகளை தொகுத்து கட்டுதல், நூல் விவரங்களை அட்டவணைப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
திருக்கோவில்கள், திருமடங்களில் உள்ள சங்க இலக்கியங்கள் சுவடிகள் மூலம் தொகுத்து நூல்களாக ஆக்கம் செய்யப்பட உள்ளதாகவும் கூறினார். பழங்கால அரிய சுவடிகளை பாதுகாக்க தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
