Career
SSC CHSL 2020 தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒருங்கிணைந்த மேல்நிலைப் பிரிவு தேர்விற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வனையமான SSC வெளியிட்டது. இதற்கு 2019 டிசம்பர் முதல் 2020 ஜனவரி 10ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பப்பதிவு நடைபெற்றது.

இதற்கான தேர்வு 2020 மார்ச் 16ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மத்திய அரசுப் பணியில் சேரலாம்.
தற்போது SSC CHSL 2020 தேர்விற்கான நுழைவு சீட்டை SSC வெளியிட்டுள்ளது. நுழைவுச் சீட்டினை அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.sscsr.gov.in மூலம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த நுழைவுச் சீட்டில் உள்ள புகைப்படம், பெயர் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதையும் சரிபார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
