SSC-CGL தேர்வு – இலவச பயிற்சி வகுப்பில் சேர வேண்டுமா… இதோ முழு விபரம்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள SSC-CGL-2023 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை மே 25 முதல் நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், பணியாளர் தேர்வாணையம் (SSC-CGL-2023), ரயில்வே தேர்வு வாரியம் (RRB) மற்றும் வங்கி பணியாளர்கள் தேர்வு வாரியம் (IBPS) நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத் துறை மூலம் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களை https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX இல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உடல் எடையை குறைக்காத காவல்துறை அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு: முதல்வர் எச்சரிக்கை..!

இந்த இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே பயிற்சி வகுப்பில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பதிவு செய்ய மே 20 கடைசி நாள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.