படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போன என்.எஸ்.கிருஷ்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. என்.எஸ்.கே-வை ஆச்சர்யப்படுத்தயி எஸ்.எஸ்.வாசன்

இந்திய சினிமாவின் அந்தக் காலத்து பிரம்மாண்டம் என்றால் அது எஸ்.எஸ்.வாசன் தான். தனது தயாரிப்பு நிறுவனமான ஜெமினி ஸ்டுடியோஸ் மூலம் பல பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்தவர். நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சம்பளத்தை அள்ளி வழங்கியவர். தான் செலவழிப்பதைப் போலவே படத்தையும் வெற்றியாக்கி அதில் பல மடங்கு லாபத்தை எடுத்து அதே சினிமாவில் மீண்டும் அடுத்தடுத்த படங்களில் தனித்துவம் காட்டியர் எஸ்.எஸ்.வாசன்.

இவரின் பிரம்மாண்ட படங்களுக்கு உதாரணமாக சந்திரலேகா படம் ஒன்றே போதும். அந்தக் காலகட்டத்திலேயே ஒரே பாடலுக்காக பல நூறு துணை நடிகர்களைக் கொண்டு ஒரு டிரம்ஸ் இசைக்கும் பாடல் காட்சியைப் படமாக்கினார். மேலும் ஔவையார் படத்திற்காக பல நிஜ யானைகளை ஒரே காட்சிக்காக பயன்படுத்தினார். இப்படி பணத்தினை தண்ணீராகச் செலவழித்து தான் எடுக்கும் படங்களில் பிரம்மாண்டத்தைக் காட்டி அந்தக் கால சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டார்.

தமிழ் மட்டுமல்லாது இந்தி சினிமாவிலும் எஸ்.எஸ்.வாசன் புகழ் பெற்றவராகத் திகழ்ந்தார். 1948-ல் தொடங்கிய இவரது திரைப்பயணம் 1970 வரை நீடித்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கும்  மேலாக இந்தியத் திரையுலகையே தனது பிரம்மாண்ட செட்டுகளால் அதிர வைத்தவர்.

ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கிய ‘மணமகள்‘ படத்திற்காக பயன்படுத்திய மெட்டைக் கேட்டு சிலாகித்துப் போயிருக்கிறார் எஸ்.எஸ்.வாசன். அப்போது தமிழில் திரைப்படங்கள் எடுப்பதை நிறுத்தி விட்டு இந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். எனவே அடுத்து தான் இயக்கப் போகும் இந்தி படத்திற்காக இந்த மெட்டை அதில் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்ற என்.எஸ்.கிருஷ்ணனிடம் அனுமதி கேட்டிருக்கிறார்.

இசையமைப்பளார் தேவாவின் ஒயிட் & ஒயிட் டிரஸ்ஸுக்குப் பின்னால இப்படி ஒரு சம்பவமா? ஆளையே மாற்றிய பாடகர்

கலைவாணரும் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியது மட்டுமல்லாமல் அந்தப் பாடலின் மெட்டு இந்தியில் சரியாக உருவாகியிருக்கிறதா என்று பாடல்பதிவின் கடைசி வரை கூடவே இருந்திருக்கிறார் என்.எஸ்.கிருஷ்ணன். பின்னர் வீட்டுக்குச் சென்றவருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு கவர் நிறைய பணத்தை எஸ்.எஸ்.வாசன் என்.எஸ்.கிருஷ்ணன் வருவதற்கு முன்பே அவர் வீட்டிற்குக் கொடுத்துவிட்டிருக்கிறார். அந்தப் பணத்தை எண்ணிய போது 15,000 இருந்ததாம்.

ஷாக்கான என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எஸ்.வாசனிடம் எதற்கு இந்தப் பணம் என்று கேட்க, உங்களது மெட்டை எனது படத்தில் பயன்படுத்தினேன் அல்லவா அதற்கான தொகை தான் என்று கூறியிருக்கிறார். என்.எஸ்.கிருஷ்ணனும் ஒரு மெட்டிற்கு 15,000 ரூபாயா என்று ஆச்சர்யப்பட்டுப் போயிருக்கிறார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.