காதலனுக்கு இசை கற்றுத்தரும் நடிகை ஸ்ருதி

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி. இவர் ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சில வருடங்களாக எந்த ஒரு படத்திலும் அதிகம் நடிக்கவில்லை.

முன்பு வேறு நாட்டு நபரை காதலித்து வந்த ஸ்ருதிக்கு அந்த காதல் பிரேக் அப் ஆனது.

தற்போது டெல்லியை சேர்ந்த சாந்தனு என்பவரை இவர் காதலித்து வருகிறார்.

அவ்வப்போது தாங்கள் சேர்ந்து இருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் இவர்.

இதை பார்த்த ஸ்ருதியின் ரசிகர் ஒருவர் உங்கள் காதல் எப்படி சென்று கொண்டிருக்கிறது என வினவி இருக்கிறார்

இதற்கு பதிலளித்த ஸ்ருதி,மைக்கேலை பிரிந்த பிறகு சில காலம் சிங்கிளாகவே இருந்தேன். சாந்தனுவை பார்த்த பிறகு நண்பர்கள் ஆனோம். பின்பு அதுவே காதலாக மாறியது. இப்போது நாங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்கிறோம்.

எப்போதும் நான் காதலை மறைத்ததில்லை. அந்த வகையில் எனது ரசிகர்களிடம் நான் வெளிப்படைத்தன்மையுடனே உள்ளேன் .

காதலை மறைக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. எனது காதலர் இசையில் ஆர்வம் கொண்டவர் டிரம்ஸ் வாசிப்பார் அவருக்கு தற்போது கீ போர்டு வாசிக்க கற்றுக்கொடுத்து வருகிறேன் என ஸ்ருதி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment