பிரபாஸ் உடன் பிரமாண்ட படத்தில் இணையும் ஸ்ருதி

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர்.

இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வந்தார், கடந்த சில வருடங்களாக இவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. கடைசியாக இவர் சூர்யாவின் சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது இவர் நடிப்பில் தெலுங்கில் கிராக் என்ற திரைப்படம் வெளியானது, காமர்சியல் படமான கிராக் பெரிய வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் அடுத்ததாக கே.ஜி.எப் பட இயக்குனர் இயக்கத்தில் பிரபாஸ் ஜோடியாக சலார் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் நடிகை ஸ்ருதியின் பிறந்தநாள் என்பதால் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.