சிறந்த நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்வு-15 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிப்பு!!

நம் இந்தியாவில் 75வது சுதந்திர தின விழா நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அதிதீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்திலும் இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது.

ஏனென்றால் இந்தியாவில் 75வது ஆண்டு சுதந்திர தின விழா என்பது அவர்களின் தியாகத்தை நினைவுபடுத்தும் தினமாக கருதப்படுகிறது. இந்த நாளில் நம் தமிழகத்தில் சிறந்த மாநகராட்சி, நகராட்சி தேர்வு செய்யப்பட்டு அவைகளுக்கு பரிசு தொகையும், பதக்கங்களும் வழங்கப்படும்.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் சிறந்த நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சிறந்த நகராட்சியாக தேர்வான ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு 15 லட்சம் ரூபாய் பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறிய குறிப்புத்தூரில் பால்கோவா மிகவும் ஃபேமஸான ஒரு உணவு பொருளாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்தின் சின்னமாக காணப்படுகின்ற கோபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.