புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் துலுக்க நாச்சியார் சன்னதி

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் உள்ள சன்னதிதான் துலுக்க நாச்சியார் சன்னதி. இந்த சன்னதியில் உள்ளவர் தான் துலுக்க நாச்சியார்.

இஸ்லாமிய பெண்ணான இவரின் பெயர் சுரதானி என்பதாகும். டெல்லி பாதுஷா கொள்ளையடித்து சென்று நீண்ட நாட்கள் வைத்திருந்தது வரலாறு.

அப்போது பாதுஷாவின் மகளான சுரதானி திருமாலின் சிலையின் மீது மனதை பறிகொடுத்து இருக்கிறார்.

நீண்ட வருடங்கள் கழித்து அரங்கநாதர் விக்ரகத்தினை டெல்லி கொண்டு வந்தபோது துலுக்க நாச்சியாரான சுரதானி அந்த சிலையை பிரிய மனமில்லாது திருவரங்கத்தினை அடைந்து அந்த சிலையோடு கலந்து விட்டாராம்.

அதனால் துலுக்க நாச்சியாருக்கு இங்கு ஒரு தனி சன்னதி அமைந்துள்ளது. இசுலாமிய வழக்கப்படி அகிலும், சந்தனமும் கலந்த தூப்புகை போடுவது இச்சந்நிதியில் நடைபெறுகிறது. இங்கு அரங்கநாதர் இசுலாமியர்களைப் போல கைலி ஆடையுடன் காட்சியளிக்கிறார்.

தங்களின் காதல் கை கூட கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ துலுக்க நாச்சியாரையும் பெருமாளையும் வேண்டிக்கொள்ளலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.