வேறு வழியில்லை….; தமிழகத்திற்கு தஞ்சமாகும் இலங்கை தமிழர்கள்..!! இன்று 18 பேர் வருகை;
தற்போது இலங்கை நாட்டு மக்கள் அகதிகளாக நம் தமிழகத்திற்கு வருகை புரிந்து கொண்டு வருகின்றனர். ஏனென்றால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் நிலவிக் கொண்டு வருகிறது.
இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் தேவையும் அதிகரித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளதால் பொருட்களின் பற்றாக்குறை காணப்படுகிறது.
இதனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை வாழ் தமிழர்கள் வேறு வழியின்றி அகதிகளாக தமிழகத்திற்கு கடல்வழியாக நுழைகின்றனர். அந்தப்படி இன்றையதினம் 18 பேர் தமிழகம் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையிலிருந்து மேலும் 18 தமிழர்கள் அகதிகளாக நம் தமிழகம் வந்துள்ளனர். ஏற்கனவே 11 குடும்பத்தை சேர்ந்த நாற்பத்தி இரண்டு தமிழர்கள் வந்துள்ள நிலையில் மேலும் 18 பேர் தமிழகத்தின் அடைந்துள்ளனர்.
தனுஷ்கோடிக்கு வந்த 13 பேர் ராமேஸ்வரம் சேரானகோட்டை கடற்கரை பகுதிக்கு வந்த ஐந்து பேரிடம் கியூ பிரிவு விசாரணை நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
