Connect with us

இலங்கையில் அதிபர், புதிய பிரதமர் ஆகியோர் பதவி விலகுகின்றனர்?

ranil wickremesinghele

செய்திகள்

இலங்கையில் அதிபர், புதிய பிரதமர் ஆகியோர் பதவி விலகுகின்றனர்?

சில மாதங்களுக்கு முன்புதான் இலங்கையில் பிரதமர் பதவி விலகினார். இதன் பின்பு புதிய பிரதமராக எதிர் கட்சியின் தலைவர் சுனில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். இவ்வாறு உள்ள நிலையில் அவர் மீண்டும் பதவி விலக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி மக்கள் புரட்சியை அடுத்து இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் பதவி விலக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் அதிபர் பிரதமர் பதவி விலக பெரும்பாலான கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருவதாகவும் இலங்கை சுற்றுவட்டார அரசியலில் தகவல் கிடைத்துள்ளது.

பதவி விலக ரணில் விக்கிரமசிங்கே மறுத்ததாக தகவல் வெளியான நிலையில் அவர் பதவி விலக சம்மதித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. தற்போதைய சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் உடனடியாக அனைத்து கட்சி அரசை அமைப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து கட்சி அரசமைய வழி விடும் வகையில் பதவி விலக தயார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். அனைத்து கட்சி அரசு அமைந்து புதிய அதிபர் தேர்வாகும் வரையில் சபாநாயகர் தற்காலிக அதிபராக பொறுப்பாற்றுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top