சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட சோகம்.. கணவரை இழந்த இலங்கை பெண்ணால் பரபரப்பு

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தனது கணவருடன் சுற்றுலா வந்த பெண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் தனது கணவரை இழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த ராகவேந்திரா மற்றும் அவரது மனைவி உதய ராணி ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்திற்கு சுற்றுலா விசாவில் வந்தனர். தமிழ்நாட்டில் உள்ள தங்களது உறவினர் மற்றும் நண்பர்களை சந்தித்துவிட்டு கோவில் குளங்களை சுற்றிவிட்டு அவர்கள் நேற்று மீண்டும் இலங்கை திரும்புவதற்காக சென்னை விமான நிலையம் வந்தனர்.

அங்கு போர்டிங் பாஸ் கொடுத்து விட்டு அவர்கள் பாதுகாப்பு பிரிவில் நின்று கொண்டிருந்தபோது திடீரென ராகவேந்திராவுக்கு நெஞ்சு வலி வந்தது. இதனையடுத்து அவரது மனைவி உதவிய ராணி மருத்துவரை அழைக்குமாறு உதவி கேட்க விமான நிலைய மருத்துவர்கள் உடனடியாக வந்திருந்த அவரை சோதனை செய்தனர்.

அப்போது ராகவேந்திரருக்கு நெஞ்சு வந்ததால் அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து உதயராணி அதிர்ச்சி அடைந்தார். தனது கணவரின் உடல் மீது அவர் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து ராகவேந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.