தமிழகத்தை நம்பும் இலங்கை மக்கள்!! மேலும் எட்டு பேர் வருகை;

உலக அளவில் ஸ்ரீலங்கா பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. மேலும் இலங்கையில் தொடர்ந்து ஆட்சி மாற்றமும் நிகழ்ந்து கொண்டு தான் வருகிறது. கடந்த இரண்டு மாதத்தில் இரண்டு முறை பிரதமர்கள் மாறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அங்குள்ள மக்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக கிளர்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு மட்டுமில்லாமல் அங்கு உணவு பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.

இதனால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து இலங்கைக்கு உதவி செய்து கொண்டு வருகிறது. இருப்பினும் கூட இலங்கை மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தப்பித்து செல்ல முயற்சியில் அதிக அளவு ஈடுபட்டு வருகின்றனர்.

அதிலும் நம் தமிழகத்திற்கு தினம் தோறும் இலங்கை மக்கள் அகதிகளாக வந்து கொண்டே வருகின்றனர். அந்த வகையில் இன்றும் எட்டு பேர் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பொருளாதார நெருக்கடி சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து எட்டு பேர் ராமேஸ்வரம் வந்துள்ளனர். ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கம்பிப்பாடு பகுதியில் 3 குழந்தைகள் உட்பட எட்டு பேர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே இலங்கையில் இருந்து வந்த 142 பேர் தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தும் உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment