விரைவில் நடிக்க வருகிறார் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி!…

6d0651e243cf53af3938ab5c207028bf-1

இந்தி தயாரிப்பாளர் போனி கபூர்- நடிகை ஸ்ரீதேவி தம்பதிக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். 

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், தடக் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவர் நடித்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே நடிகை ஶ்ரீதேவி உயிரிழந்தது சோகம். தடக் கவனிக்கப்பட்டதை அடுத்து நெட்பிளிக்ஸுக்காக கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் தொடரில் நடித்தார்.

இந்நிலையில், ஜான்வி கபூர் போல, குஷி கபூரும் எப்போது ஹீரோயின் ஆவார் என்று போனி கபூரிடம் கேட்டு வந்தனர். இந்நிலையில் அவர் இப்போது அதற்கு பதில் அளித்துள்ளார். குஷியும் நடிப்பில் ஆர்வமாக இருப்பதாகவும் விரைவில் அதற்காக அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றும் போனி கபூர் கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, நான் தயாரிப்பாளராக இருந்தாலும் குஷியை நான் அறிமுகம் செய்யவில்லை. நான் மதிக்கும், பாதுகாப்பாக உணரும் மற்றொரு தயாரிப்பு நிறுவனம் அவரை அறிமுகப்படுத்தும். குஷி, தனக்கான வழியை அவராகவே தேர்வு செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.