Connect with us

இலங்கை பொருளாதார நெருக்கடி 2023 ஆம் ஆண்டு வரை தொடரும்!!-புதிய பிரதமர் அறிவிப்பு;

ssri lankas money

செய்திகள்

இலங்கை பொருளாதார நெருக்கடி 2023 ஆம் ஆண்டு வரை தொடரும்!!-புதிய பிரதமர் அறிவிப்பு;

சில மாதங்களாக பெரும்ப பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கிறது. இதனால் இலங்கையில் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். மேலும் இலங்கையில் ஆட்சி மாற்றமும் தற்போது நிகழ்ந்துள்ளதாக காணப்படுகிறது.

ஏனென்றால் இதற்கு முன்பு இருந்த பிரதமர் ராஜபக்சே, ராஜினாமா செய்த பின்பு எதிர்க்கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்க பிரதமராக அறிவிக்கப்பட்டார். அவர் பிரதமர் ஆன பின்னும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடரும் என்று அறிவித்துள்ளது பெரும் வருத்தத்தை உருவாக்கியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி குறைந்தது 2023 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்றும் கூறினார். 2023 ஆம் ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு கூறினார். பொருளாதார நெருக்கடி குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தில் பேசினார்

திவால் நிலையை ஒப்புக்கொள்கிறோம், நாட்டில் உணவு, எரிபொருள், மருந்து பொருட்களின் கடுமையான பற்றாக்குறை மேலும் தொடரும் என்று ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசிடம் வெளிநாட்டு நாணயம் இல்லை என்றும் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கையில் பல மாதங்களாக பண வீக்கம், நீண்ட மின்வெட்டு பிரச்சனையை மக்கள் சந்தித்துக் கொண்டு வருகின்றனர் என்றும் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top