இலங்கை தமிழர்கள் ஒன்றும் அகதிகள் கிடையாது! நாங்க இருக்கோம்!!

தற்போது தமிழகத்தின் முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின். அவர் தினந்தோறும் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவை மக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக அமைந்து காணப்படுகிறது.மு க ஸ்டாலின்

அதன் தொடர்ச்சியாக இலங்கை தமிழர்களின் புதிய குடியிருப்புக்காக முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதன்படி இலங்கை தமிழர்களுக்காக முதல் கட்டமாக ரூபாய் 142.14 கோடி செலவில் 3510 புதிய வீடுகள் கட்ட முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

தமிழர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் ஒரே தாய் மக்கள் தான்; கடல் தான் நம்மைப் பிரித்து இருக்கிறது என்று இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். வேலூர் மேல்மொணவூரில் இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் திட்ட விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.

இலங்கை தமிழர்கள் அகதிகள் அல்ல, நாங்கள் இருக்கிறோம் என்று முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். இதனால் முதல்வர் முக ஸ்டாலின் இன்று காலை விரைந்து நேரில் சென்று மக்களை சந்தித்து இவ்வாறு பேசியது பலரிடம் வரவேற்கத்தக்கதாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment