Connect with us

அதிகாரப்பூர்வமான மாளிகையை விட்டு தப்பி ஓடிய இலங்கை அதிபர்!!

gotabaya

செய்திகள்

அதிகாரப்பூர்வமான மாளிகையை விட்டு தப்பி ஓடிய இலங்கை அதிபர்!!

இலங்கையில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. இதன் காரணமாக பிரதமர் மற்றும் அதிபர் ஆகியோர் பதவி விலக உள்ளதாக தகவல் கிடைத்தது. மேலும் அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஏனென்றால் ராணுவ கப்பல்களில் அவரின் பொருட்கள் அனைத்தும் ஏற்றப்பட்டு வந்ததாக தெரிந்தது. இந்த நிலையில் மாளிகையை விட்டு இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே தப்பி ஓடியதாக தகவல் கிடைத்துள்ளது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வமான மாளிகையை விட்டு தப்பி ஓடி உள்ளார். கொழும்புவில் உள்ள மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ள நிலையில் கோத்தபய ராஜபக்சே தப்பினார்.

கோத்தபய ராஜபக்சே ராணுவ முகாமில் பலத்த பாதுகாப்புடன் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ராணுவத்தினர் கண்ணீர் புகை கொண்டு வீசி விரட்டிய நிலையிலும், மாளிகைக்குள் நுழைந்தனர் போராட்டக்காரர்கள்.

இதனால் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவின் மாளிகை வந்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிக கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராடிக் கொண்டு வருகின்றனர்.

இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டத்தில் 33 பேர் காயமடைந்துள்ள நிலையில் இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top