தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!! 8 பேர் கைது!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் மேலும் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நம் தமிழகத்தை பொறுத்த வரையில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து மத்திய அரசு தலையிட்ட போதும் இலங்கை கடற்படை இத்தகைய அத்துமீறல்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணம் பகுதியை சேர்ந்த விசைப்படகில் மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டு நெடுந்தீவில் மீன்பிடித்தாக கூறி 8 மீனவர்களை கைது செய்தனர்.

அதோடு மீனவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். காங்சேசன் துறைமுகம் அழைத்துச்செல்லப்பட்ட தமிழக மீனவர்களிடம் விசாரணை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த 12 பேர் ஏற்கனவே இலைங்கை சிறையில் வாடி வரும் நிலையில் மேலும் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்கள் மத்தியில் வேதனையடைய செய்துள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.