ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டி அடிப்பு; வலைகளை வெட்டி வீசி இலங்கை கடற்படை அட்டூழியம்!

கச்சதீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததோடு பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்படி வலைகளை கடலில் வெட்டி வீசி இலங்கை கடற்படையினர் அத்துமீறியுள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 500 மேற்பட்ட விசைப்படகுகளில் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி கடலுக்கு சென்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டி அடித்துள்ளனர்.

மேலும் பத்துக்கும் மேற்பட்ட விசைபடகுகளிள் ஏறிய இலங்கை கடற்படை வீரர்கள் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசி இனிமேல் இந்த பகுதிக்கு வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் படம் ஒன்றுக்கு பத்தாயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை நஷ்டத்துடன் கரை திரும்பியுள்ளனர்.

கடந்த ஐந்தாம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரையும் இரண்டு விசைபடகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்திற்கு பின் நான்கு நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கடற்படை மீண்டும் விரட்டி அடித்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் வேதனை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், விரட்டி அடிப்பதும் தொடர்கதையாகி வருவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment