இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: 13 மீனவர்கள் கொடூர தாக்குதல்!!

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே இலங்கை கொள்ளையர்கள் தாக்கியதில் 13 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே மேடு கிராமத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த வியாழக்கிழமை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அவன் ஒரு சைக்கோ! திருநங்கைக்கு ரூட் விட்ட அர்ணவ்: ஆடியோ இதோ!

இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பெருமாள் பேட்டை கிராமத்தை சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த புதன்கிழமை கடலுக்கு சென்றனர். இந்நிலையில் இவ்விரு குழுவினரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கடல் கொள்ளையர்கள் படகுகளை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர்.
அதோடு மீனவர்களின் வலை திசைகாட்டும் கருவி மற்றும் மீன்களை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.

அடி தூள்!! சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது இந்திய மகளிர் அணி!!

இதில் படுகாயம் அடைந்த 13 மீனவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், சம்பவம் குறித்து கடலோர கடற்படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment