Connect with us

தமிழகத்தை தேடி வந்த இலங்கை மக்களை கைது செய்த இலங்கை கடற்படை…!!

srilanka coast guard1

News

தமிழகத்தை தேடி வந்த இலங்கை மக்களை கைது செய்த இலங்கை கடற்படை…!!

தற்போது உலகளவில் இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக இலங்கையில் உணவு பற்றாக்குறையும் அதிகரிக்க தொடங்கி விட்டது. எனவே இலங்கை வாழ் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருசிலர் இலங்கை நாட்டை விட்டு எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்ற முயற்சியில் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வருகின்றனர். அதுவும் குறிப்பாக நம் தமிழகத்திற்கு ஓரிரு வாரங்களாக இலங்கைத் தமிழர்களின் வரத்து அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்ப முயன்ற இலங்கை வாழ் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி இலங்கை யாழ்பாணத்தில் இருந்து படகு மூலம் தமிழகத்திற்கு வர முயன்ற 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் அந்நாட்டினர் தமிழகத்திற்கு வருவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாடி வந்த இலங்கை மக்களுக்கு போதுமான அத்தியாவசிய தேவைகள் வழங்கப்படுவதால் தொடர்ந்து இலங்கை மக்கள் தமிழகத்திற்கு வர முயற்சி செய்துகொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top