எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 12 பேர் விடுதலை! இலங்கை நீதிமன்றம் உத்தரவு;

தமிழகத்தில் தினம் தினம் பாதிக்கப்படுபவர்கள் யார் என்றால் மீனவர்கள்தான். ஏனென்றால் மழைக்கால தொடங்கினால் பெரும்பாலான நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலைமை உருவாகும். ஒருவேளை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றால் அவர்கள் பெரும்பாலும் இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்தனர் என்று கூறி சிறைபிடிக்க படுவார்கள்.

ஒரு சில நேரங்களில் சுட்டுக் கொல்லப்படுவார்கள். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் பகுதியில் இருந்து இரண்டு விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை படையினர் கைது செய்தனர்.

தென் கடலான மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்கள் கிட்டத்தட்ட 12 நாட்களுக்கு மேலாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் 12 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு ஜனவரி 5ஆம் தேதி வரை காவலில் அடைக்க வேண்டும் என்று தீர்ப்பு வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இலங்கை நீதிமன்றம் மண்டபம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களில் மண்டபத்தை சேர்ந்த 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 68 பேரை டிசம்பர் 19ஆம் தேதி கைது செய்தது இலங்கை கடற்படை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment