உளவுத்துறை எச்சரிக்கை! இலங்கை தேசவிரோதிகள் தமிழகத்துக்கு ஊடுருவ அதிக வாய்ப்பு..!!

தற்போது இலங்கை கலவர பூமியாக உருமாறியுள்ளது. ஏனென்றால் கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் உள்ள அனைத்து இடங்களிலும் போராட்டக்காரர்கள் மற்றும் ராஜபக்சே ஆதரவாளர்கள் இடையே சண்டை நிகழ்ந்து கொண்டு வருகிறது.

ஏனென்றால் இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகியதுடன் தொடர்ந்து கலவரம் வெடித்தது. மேலும் கலவரத்தில் இலங்கை ஆளும் கட்சி எம்பி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இவை தமிழகத்திலும் தொடர வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இலங்கை வன்முறையைத் தொடர்ந்து தமிழகத்தில் தேசவிரோதிகள் ஊடுருவ அதிக வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்த வேண்டும் எனவும் மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .இலங்கை சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பியதால் கடல்மார்க்கமாக நுழைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment