பெரும் பொருளாதர நெருக்கடியில் சிக்கி தவித்த போதிலும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் என்பது இன்னும் குறைந்தபாடில்லை. அந்த வகையில் 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்படியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
அதோடு மீனவர்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரையும் திரிகோணமலை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என இலங்கை கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.