இலங்கை: மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் பிரதமர் விட்ட கோரிக்கை?

கடந்த சில மாதங்களாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால் அந்நாட்டு பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் தற்போது வன்முறையாக வெடித்துள்ளது. இதன் காரணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருவதாக அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தி வரும் சூழலில் தற்போது அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்ட அந்நாட்டு பிரதமர் ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே திரிகோணமலைக்கு தப்பியோடியதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment