இருளில் மூழ்கிய இலங்கை!! தினமும் 13 மணி நேரம் கரண்ட் கிடையாது!!!
இலங்கையில் தற்போது வாழும் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி காணப்படுகின்றனர். ஏனென்றால் இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி உண்டாகி உள்ளது. இதனால் இலங்கை அரசு பல நாடுகளிடம் கடன் உதவியை கேட்டுக்கொண்டு வருகிறது.
அந்த அளவிற்கு அங்கு பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் நேற்றைய தினம் இலங்கையில் டீசல் இரண்டு நாட்களுக்கு கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்றும், நேற்றும் வாகன ஓட்டிகளுக்கு இலங்கையில் டீசல் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் இலங்கையில் தினந்தோறும் 10 மணி நேரம் மின்வெட்டு இருக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஏனென்றால் பொருளாதார நெருக்கடி காரணமாக நிலக்கரி வாங்குவது கூட நிதி பற்றாக்குறை உள்ளதால் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க தினசரி 10 மணி நேரம் மின்வெட்டு நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளது. பல மாதங்களாக கட்டணம் செலுத்தாத நுகர்வோரின் வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த மின்வெட்டு தற்போது கூடுதலாக மூன்று மணிநேரம் அதிகரித்துள்ளது. அதன்படி இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இதுவரை இல்லாத நிகழ்வாக நாளொன்றுக்கு மூன்று மணி நேர மின்வெட்டு தடையை இன்று முதல் அரசு அமல்படுத்தியுள்ளது.
