Connect with us

நெருக்கடியில் இலங்கை; 40,000 டன் அரிசி கொள்முதலுக்கு தடை இல்லை!!

ஹை கோர்ட்

Tamil Nadu

நெருக்கடியில் இலங்கை; 40,000 டன் அரிசி கொள்முதலுக்கு தடை இல்லை!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தமிழகத்திலிருந்து 40,000 டன் அரிசி வழங்குவதாக தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அரிசி அதிக விலைக்கு வாங்கப்படுவதாக கூறி திருவாரூர் மாவட்டம் திருகண்ணமங்கை கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில் ஒரு கிலோ அரிசி ரூ.33.50 என்ற விலையில் 40,000 டன் அரிசியை கொள்முதல் செய்ய  தமிழக அரசு ரூ.13 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்திய உணவு கழகம் ஒரு கிலோ அரிசியை ரூ.20-க்கு விற்பனை செய்வதாகவும் அதிலிருந்து ரூ.54 கோடி மிச்சமாகும் என அவர் குறிப்பிட்டார். இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக இந்திய உணவு கழகத்திடம் வாங்கப்படும் அரிசி தரமற்றவை என்றும் இதுபோன்ற தகவல் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அம்மனுவில் தெரிவித்தார்.

இதனிடையே இலங்கைக்கு அரிசி வழங்க தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தபோது இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கின் விசாரணை கோடை விடுமுறைக்கு பின் தொடங்கும் என ஒத்திவைக்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top