17-வது முறையாக கடன் கேட்கும் இலங்கை !! கருணை காட்டுமா IMF நிதியம்?
இலங்கையில் கடந்த ஒரு மாதகாலமாகவே பெரும் பொருளாதர நெருக்கடி நிலவிவருகிறது. இதனால் அங்கு வாழும் பொதுமக்கள் அத்தியாவச பொருட்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு பிச்சை எடுக்கும் நெருக்கடியில் தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் எரிபொருட்கள் கூட வாங்க முடியாத நிலை உருவாகி இருப்பதால் இல்லங்கையின் முக்கிய நகரமாக கொழும்பில் நாளோன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்படுகிறது. இந்த சூழலில் அந்நாட்டில் IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம் டாலரை கடன் வாங்க இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் கடந்த 1950 முதல் 2016 வரையில் IMF- ம் இருந்து சுமார் 16 முறை இலங்கை கடன் வாங்கியுள்ளது. குறிப்பாக 2009 ஆம் ஆண்டில் 260 டாலர் கோடியும் IMF கடன் அளித்துள்ளது. அதே போல 2016 ஆம் ஆண்டில் 150 கோடி டாலர் கடன் தொகையினை நிபந்தனைகள் உடன் கடன் வழங்க உறுதியளித்தது.
இந்த சூழலில் தற்போது 2016 ஆம் ஆண்டில் உறுதியளிக்கப்பட்ட 150 கோடி டாலர் கடனில், 130 கோடி டாலர் மட்டும் அளிக்க முன்வந்து இருப்பதாகவும், இதில் 20 கோடி டாலரை அளிக்க IMF- மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதனிடையே கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பை சரிசெய்யவும், தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க IMF- யிடம் இருந்து மீண்டும் கடன் பெறுவதற்கு இலங்கை அரசு தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
