இலங்கை விவகாரம் – வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
இலங்கையை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இந்த சூழலில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க விரைவில் வசதிகளை செய்துதரவும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதத்தின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு ஒன்றிய அரசு அனுமதித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்பில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்புவதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழக மக்களுக்கு விரைவில் அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதற்கு இக்கடிதத்தில் கூறியுள்ளார். மேலும், இலங்கை சிறையில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விடுவிக்க வேண்டுமென்றால் ரூபாயில் 2 கோடி செலுத்திவிட்டு, ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என அந்நாட்டு நீதிமன்றம் கூறியது.
ஆனால் மீனவர்களால் இவ்வளவு பெரிய தொகையினை செலுத்த முடியாத காரணத்தினால் இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
