இலங்கையில் பெருளாதார நெருக்கடி: மேலும் 8 பேர் தமிழகம் வருகை!!

இலங்கையில் பொருளாதர நெருக்கடி தொடரும் நிலையில் அங்கிருந்து மேலும் 8 பேர் தமிழகத்திற்கு தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து இருப்பதால் அந்நாட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர்.

அதோடு நாள் ஒன்றுக்கு 13 மணிநேரம் மின்சாரம் தடை செய்யப்படுவதால், மின்சாரத்தை நம்பியுள்ள மக்களில் பணிகள் முடங்கியுள்ளது. இதன் காரணமாக இலங்கை மக்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வருவது நாளுக்கு நாள் அதிகரிகரித்துக் கொண்டே போகிறது.

அதன் ஒருபகுதியாக இன்றைய தினத்திலும் இலங்கையில் இருந்து 8 பேர் மணல் திட்டு பகுதியில் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களை மீட்ட கடலோரப்படை போலீசார் முகாம்களில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களிடம் காவல்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி, முகாம்களில் தங்க வைக்கப் படுவதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.