இலங்கையில் வெடித்த போராட்டம்: 3 பேர் கவலைக்கிடம்!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால் நாட்டின் ராஜபக்சேக்கள் பதவி விலக வேண்டுமென போராட்டம் நடத்தினர். அந்த வகையில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே திரிகோணமலைக்கு தப்பியோடியதாக தகவல்கள் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினத்தில் போராட்டகாரர்கள் அதிபர் மாளிகையை அடித்து நொறுக்கினர். அதே சமயம் இலங்கை அதிபர் நாட்டைவிட்டு அமெரிக்கா தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று நடந்த போராட்டத்தில் சிக்கி காயமடைந்த 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு அவசர சிகிச்சை பிரிவில் ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment