18 பேரை தாக்கிய கொடூர அணில்

அணில் மிகவும் சாதுவான பிராணி என்றுதான் கேள்விப்பட்டுள்ளோம். ராமாயணத்தில் கூட ராமருக்கு அணில் உதவி செய்ததாகவும் ராமர் அணிலை தடவி கொடுத்ததால் அணில் மேல் கோடு கோடாக விழுந்ததாக சொல்லப்படுவதுண்டு.

நம்ம ஊர்களில் திரியும் அணிலும் இதுவரை யாருக்கும் எந்த துன்பமும் கொடுத்தது இல்லை அது அதன் வேலையை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கும்.

இந்த நிலையில் பிரிட்டனில் ஒரு அணில் மிக கொடூரமாக 18 பேரை கடித்துள்ளது.

வேறு வழியில்லாமல் அந்த அணிலை கால்நடை மருத்துவரின் உதவியுடன் கருணை கொலை செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment