பரவும் டெங்கு: கொரோனாவை அடுத்து இன்னொரு ஆபத்து!

91fc3d7959f4c6c79506679a664a8034

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்து வறுமையில் தவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனாவில் இருந்தே இன்னும் மக்கள் மீளாத நிலையில் தற்போது புதிதாக டெங்கு அச்சம் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நான்கு பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதை அடுத்து இது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

கொரோனா முதல் அலை முடிந்து தற்போது இரண்டாவது அலையும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது என்பதும் மூன்றாவது அலை இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக டெங்கு காய்ச்சல் என்னும் அபாயம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கூடலூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் அங்கு ஒரு சிலருக்கு காய்ச்சல் இருப்பதால் டெங்கு பரவும் அபாயம் இருப்பதால் அங்கு சுகாதார அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதிக காய்ச்சல் தலைவலி வாந்தி உடல் சோர்வு கண் வலி மூட்டு வலி ஆகியவை டெங்கு காய்ச்சல் அறிகுறி என்று கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment