பாகிஸ்தானுக்கு டூர் செல்லும் ஜிம்பாப்வே அணி: அட்டவணை அறிவிப்பு 

 

கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை அடைந்து கொண்டு இருந்தாலும் தற்போது கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிவிட்டன என்பதும், குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்கு ஜிம்பாப்வே அணி கிரிக்கெட் டூர் செல்ல முடிவு செய்துள்ளது. அடுத்து இந்த தொடரின் போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது 
பாகிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக பல கிரிக்கெட் அணிகள் செல்வதற்கு தயக்கம் காட்டி வந்த நிலையில் தற்போது ஜிம்பாவே அணி அங்கு செல்ல முன்வந்துள்ளது

ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த போட்டிகளின் அட்டவணையை குறித்த அறிவிப்பை தற்போது பார்ப்போம்

அக்டோபர் 30: முதல் ஒரு நாள் போட்டி: ராவல்பிண்டி

நவம்பர் 1: 2வது ஒருநாள் போட்டி: ராவல்பிண்டி

நவம்பர் 3; 3வது ஒருநாள் போட்டி: ராவல்பிண்டி

நவம்பர் 7: முதல் டி20 போட்டி: லாகூர்

நவம்பர் 8: 2வது டி20 போட்டி: லாகூர்

நவம்பர் 10: 3வது டி20 போட்டி: லாகூர்

From around the web