பக்கத்து பக்கத்து மொட்டை மாடியில் இருந்து கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்!

 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இதனை அடுத்து உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் நடந்து கொள்கிறார்கள் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் சமூக இடைவெளியின் உச்சகட்டமாக பக்கத்து பக்கத்து மொட்டை மாடிகளில் இருந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறதுஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ஒரு இளைஞர் பந்துவீச, இன்னொரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பேட்டால் ஒரு இளைஞர் பந்தை அடிக்க இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

இந்த வீடியோ வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் எடுக்கப்பட்டது என்பதும் இஎஸ்பிஎன்  ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web