நீங்கள் ராஜா என்பதை உறுதி செய்துவிட்டீர்கள்: கோஹிலிக்கு ஸ்ரீகாந்த் பாராட்டு

 

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக பெங்களூர் அணி 16 ஓவர்கள் வரை ரன்கள் எடுக்க திணறியது.

பெங்களூர் அணி 16 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமேஎடுத்திருந்தனர் இந்த நிலையில் 16 ஓவர்கள் முடிந்த பின்னர் விராத் கோஹ்லி விஸ்வரூபம் எடுத்தார். அவர் அதிரடியாக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸராக அடித்ததில் அடுத்த 4 ஓவர்களில் மட்டும் 66 ரன்கள் பெங்களூருக்கு கிடைத்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 169 ரன்கள் எடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

விராட் கோலியின் மிக அபாரமான ஆட்டத்தால் நேற்று பெங்களூர் அணி வெற்றி பெற்றது இதனை அடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் ’நீங்கள் கிரிக்கெட்டில் ராஜா என்பதை நிரூபித்து விட்டீர்கள். நேற்றைய உங்கள் ஆட்டம் மாஸ்டர் கிளாஸ் ஆக இருந்தது. ஒரு அணியை எப்படி வெற்றிகரமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு உதாரணமாக உங்கள் ஆட்டம் இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார் 

From around the web