ஐயோ அவருக்கும்மா! புதிதாக கொரோனா பரவிய ஐபிஎல் வீரர்கள் பட்டியல்:

சிஎஸ்கே பயிற்சியாளர் மைக்கில் ஹசி மற்றும் ஹைதராபாத் பிளேயர் சஹா மற்றும் டெல்லி வீரர் அமித் மிஸ்ராவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது!
 
ipl

தற்போது  திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. மேலும் இந்த போட்டிகள் தினந்தோறும் இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறும். மேலும் இந்த ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக சென்னை மும்பை பெங்களூரு போன்ற அணிகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக காணப்படும் அணியாக கடந்த சில வருடங்களாகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த ஆண்டு  இந்த ஐபிஎல் போட்டி ஆனது தற்போது ரத்தாகி உள்ளது மக்களுக்கு மிகுந்த வேதனையையும், கிரிக்கெட் பிரியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.hussey

காரணம் என்னவெனில் ஐபிஎல் போட்டியானது கொரோனா  தாக்கத்தின் ரத்தாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த போட்டியானது பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிக்கு இடையே நடைபெறவிருந்த நிலையில் கொல்கத்தா அணியின் வீரர்கள் சிலருக்கு கொரோனா   கண்டறியப்பட்டால் அந்த போட்டியுடன் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐபிஎல்  இந்த ஆண்டு ரத்து செய்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இந்நிலையில் தற்போது மேலும் புதிதாக பலருக்கு கொரோனா என கூற படுகிறது .அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் பேட்ஸ்மேன் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளவர் மைக்கல் ஹசி அவருக்கு தற்போது ஆட்கொல்லி நோயான கொரோனா  கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர் மட்டுமின்றி ஐதராபாத் அணியின் வீரரான சஹாக்கும் கொரோனா  கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அதோடு மட்டுமின்றி முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ராவுக்கு கொரோனா  கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர் இந்த ஆண்டு டெல்லி அணியில் சுழற்பந்து வீச்சாளராக களமிறங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web