உலக பேட்மிண்டன் போட்டி: அரைஇறுதிக்கு முன்னேறினார் சிந்து

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில், பி.வி.சிந்து, சீனதைபே வீராங்கனை தாய் ஜூ யுடன் களம் இறங்கினார். துவக்கம் மிக மோசமாக இருப்பினும் அதனை சமாளித்து ஆடினார் சிந்து. அதிரடியாக ஆடி 15-15, 17-17 என்று சமனில் கொண்டு வந்தார். 1 மணி 11 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 12-21, 23-21, 21-19 என்ற செட்
 
உலக பேட்மிண்டன் போட்டி: அரைஇறுதிக்கு முன்னேறினார் சிந்து

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில், பி.வி.சிந்து, சீனதைபே வீராங்கனை தாய் ஜூ யுடன் களம் இறங்கினார்.

துவக்கம் மிக மோசமாக இருப்பினும் அதனை சமாளித்து ஆடினார் சிந்து. அதிரடியாக ஆடி 15-15, 17-17 என்று சமனில் கொண்டு வந்தார்.

1 மணி 11 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 12-21, 23-21, 21-19 என்ற செட் கணக்கில் தாய் ஜூ யிங்கை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

உலக பேட்மிண்டன் போட்டி: அரைஇறுதிக்கு முன்னேறினார்  சிந்து

அரைஇறுதிக்கு முன்னேறி இருப்பதன் மூலம் சிந்துவுக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் கிடைக்கும் என்பது தெளிவாகிவிட்டது. சிந்து அரைஇறுதியில் சீன வீராங்கனை சென் யூ பேவுடன் இன்று மோதுகிறார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-15, 25-27, 12-21 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்பெல்டிடம் 72 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில், இந்திய வீரர் சாய் பிரனீத், இந்தோனேஷியா வீரர் ஜோனதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். இதில் சாய் பிரனீத் 24-22, 21-14 என்ற நேர் செட் கணக்கில் கிறிஸ்டினை வீழ்த்தினார்.

From around the web