2021 ஐபிஎல் போட்டியில் இன்னொரு அணி சேர்ப்பா?

 
2021 ஐபிஎல் போட்டியில் இன்னொரு அணி சேர்ப்பா?

2020ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது என்பதும் இந்த தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் மிகப்பெரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இதனை ஈடுகட்டுவதற்காக 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கூடுதலாக ஒரு அணியை இணைக்க ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அனேகமாக குஜராத் மாநிலத்தில் இருந்து ஒரு அணி உருவாகலாம் என்று கூறப்படுகிறது 

IPL 2021

9வது அணி உறுதி செய்யப்பட்டால் 9 அணிகளுக்கும் புதிதாக வீரர்கள் தேர்வு செய்ய ஏலம் விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பிசிசிஐ மட்டும் ஐபிஎல் நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதாகவும், 9வது அணியை இணைப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

9 அணிகள் ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு விளையாடும் என்றால் கூடுதலாக போட்டிகளும் விளையாடப்படும் என்பதும் இதனால் ஐபிஎல் நிர்வாகத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 

From around the web