ஐபிஎல் போட்டிகளை பெரிய திரைகளில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா? அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது சில திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் என்பது  தெரிந்தது. இந்த நிலையில் தற்போது கடந்த 5 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் திரைப்படங்கள் ஐபிஎல் போட்டிகளை திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது 

இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அனுமதி அளிப்பது என்பது இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று கூறினார் 

இருப்பினும் இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்து பரிசீலனை செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல், ஒலிம்பிக், உலகக்கோப்பை உள்பட அனைத்து விளையாட்டு போட்டிகளையும் திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க வேண்டுமென்ற திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web