மூன்றாவது டெஸ்ட்டில் நடராஜன் விளையாடுவாரா? 

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விரைவில் தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்டின் முடிவில் தான் இந்த தொடரை வெல்லும் அணி எது என்பது தெரியவரும்

இந்நிலையில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது 

natarajan

ஆனால் அதே நேரத்தில் இந்த இருவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் மற்றும் நடராஜன் ஆகியோர் களம் இறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அறிமுகமான நடராஜன், டெஸ்ட் போட்டியிலும் அதே ஆஸ்திரேலியாவில் அறிமுகமாக இருக்கிறார் என்ற செய்தி தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது 

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியில் தனது இடத்தை நடராஜன் உறுதி செய்வார் என்றும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

From around the web