ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் கோஹ்லி கிடையாதா? ரசிகர்கள் அதிர்ச்சி

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும் இம்மாதம் 27 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறது என்பதும் அங்கு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளன என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணி அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார்கள் என்றும் அதன் பின்னரே பயிற்சி தொடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன 

virat anushka

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது ’பிசிசிஐ அமைப்பை பொறுத்தவரை குடும்பத்திற்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கேப்டன் விராத் கோலி தனது மனைவிக்காக மகப்பேறு விடுப்பு விண்ணப்பம் செய்து இருப்பதாகவும் எனவே அவர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும் எந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதை அவர் விரைவில் குறிப்பிடுவார் என்று கூறியுள்ளார். இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தாலும், அவரது குடும்ப சூழ்நிலையை ரசிகர்கள் புரிந்து கொண்டு அவருடைய முடிவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

From around the web