அடுத்த போட்டியிலும் அம்பத்தி ராயுடு இல்லையா? 

 

ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் அம்பத்தி ராயுடு அபாரமாக விளையாடி 71 ரன்கள் அடித்தார் 

ஆனால் அவர் காயம் ஏற்பட்டதன் காரணமாக நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வில்லை என்பதும் இந்தப் போட்டியில் சென்னை அணி தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் அம்பத்தி ராயுடு காயம் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவர் மேலும் ஒரு போட்டியில் விளையாட முடியாமல் போகலாம் என்றும் சென்னை அணியின் சிஇஓ காசி விசுவநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்

அம்பத்தி ராயுடு தற்போது குணமாகி வருவதாகவும் விரைவில் குணமடைந்தால் அவர் அடுத்த போட்டியில் விளையாட தகுதி பெறுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியில் அடுத்த போட்டியிலாவது அம்பத்தி ராயுடு இடம்பெறவேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது

From around the web