முதல் பந்திலேயே விக்கெட்: டெல்லிக்கு அதிர்ச்சி

 
முதல் பந்திலேயே விக்கெட்: டெல்லிக்கு அதிர்ச்சி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கிளைமாக்ஸ் போட்டியான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது 

13 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள டெல்லி அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 

இந்த நிலையில் இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ஸ்டோனிஸ் களமிறங்கிய நிலையில் டிரண்ட் போல்ட் வீசிய முதல் பந்திலேயே ஸ்டோனிஸ் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் டெல்லி அணி அதிர்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும் டெல்லி அணியில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஃபார்மில் உள்ளதால் அந்த அணி பதட்டமடைய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web