முதல் ஓவரிலேயே விக்கெட்: என்ன ஆச்சு பஞ்சாபுக்கு?

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50வது லீக் போட்டியான பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி சற்றுமுன் தொடங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்ததை அடுத்து பஞ்சாப் அணி களத்தில் இறங்கியது 

தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் மந்தீப் சிங் ஆகியோர் களமிறங்கினர். கடந்த போட்டியில் மந்தீப் சிங் மிக அபாரமாக விளையாடி நிலையில் இன்று அவர் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆனார் என்பது அதிர்ச்சிக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. சற்றுமுன் வரை பஞ்சாப் அணி முதல் ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ஒரு ரன் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் வென்றால் தான் பஞ்சாப் அணி 14 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும். கிறிஸ் கெய்ல் அணியில் இணைந்தவுடன் வரிசையாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப், இன்றைய போட்டியிலும் வெல்ல அவர் உறுதுணையாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இன்றைய போட்டி ராஜஸ்தானை பொருத்தவரை வாழ்வா சாவா போட்டியாகும். இன்று வெற்றி பெறவில்லை என்றால் சென்னை, கொல்கத்தா போல் அந்த அணியும் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்

From around the web