இந்திய அணியில் ரோகித் சர்மா பெயர் இடம்பெறாதது ஏன்? ரவிசாஸ்திரி பேட்டி 

 

இம்மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது என்பதும் அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இந்திய ஆஸ்திரேலிய நாட்டில் விளையாடும் இந்திய அணியின் விபரங்கள் சமீபத்தில் வெளியாகின. டெஸ்ட். ஒருநாள் மற்றும் டி20 என தனித்தனியாக மூன்று அணிகள் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த மூன்று அணியிலும் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மாவுக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளதால் மும்பை அணி விளையாடும் போட்டிகளில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக பொல்லார்டு கேப்டனாக விளையாடி வருகிறார்

இந்த நிலையில் காயம் காரணமாக தான் அவரது பெயர் இந்திய அணியில் இடம்பெறவில்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவின் காயம் குறித்த மருத்துவ அறிக்கை வெளிவந்ததாகவும் அதில் இப்போதைக்கு அவர் விளையாடாமல் இருப்பதே நல்லது என்றும் மீறி விளையாடினால் அந்த காயம் மேலும் அவருக்கு பாதிப்பை உண்டாக்கும் என்று குறிப்பிட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து தேர்வு குழுவினர் அவரை தேர்வு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார் 

எனவே ஆஸ்திரேலியா தொடர் முழுவதும் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது

From around the web