கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு கொடுத்தது ஏன்? தோனி விளக்கம்

 

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் 19 ஓவர் முடிவில் டெல்லி அணி ஒரே ஓவரில் 17 ரன்கள் வெற்றி பெற எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது. அந்த ஓவரை பிராவோ வீச வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஜடேஜா அந்த ஓவரை வீச வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது

களத்தில் இரண்டு இடதுகை பேட்ஸ்மேன் இருக்கும்போது இடது கை சுழல் பந்துவீச்சாளர் இருபதாவது ஓவரை வீசினால் மிக எளிதில் ரன்கள் அடிக்க வாய்ப்பு இருக்கிறது என்பது தெரிந்தும் தோனி ஏன் ஜடேஜாவை 20வது ஓவரை வீச வைத்தார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது 

அதே போலவே அந்த ஓவரில் 3 சிக்சர்களை அக்சர் படேல் பறக்கவிட்டதால் சென்னை அணி தோல்வியை அடைந்தது. இந்த நிலையில் கடைசி ஓவரை பிராவோ போடாமல் ஜடேஜாவை போட வைத்தது ஏன் என்பது குறித்து தோனி விளக்கம் அளித்துள்ளார் 

கடைசி ஓவரை வீசும் அளவுக்கு பிராவோ உடல் தகுதியுடன் இல்லை என்றும் அதனால் பிராவோ களத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்றும் இதனால் எனக்கு கரண் ஷர்மா அல்லது ஜடேஜா ஆகிய இருவரில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய ஆப்சன்கள் இருந்ததால் அதில் ஜடேஜாவை நான் தேர்வு செய்தேன் என்றும் கூறினார் 

மேலும் ஷிகர் தவானின் முக்கிய விக்கெட்டை வீழ்த்துவதில் நான்கு கேட்ச்களை நாங்கள் தவறவிட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று கூறியிருந்தார். அதுமட்டுமன்று இரண்டாவது இன்னிங்சில் பேட்ஸ்மேன்களுக்கு ஆடுகளம் ஆதரவாக இருந்தது என்பதால் ஷிகர் தவான் சிறப்பாக பேட்டிங் செய்ததாகவும் தோனி தனது பேட்டியில் கூறியுள்ளார் 

இந்தத் தோல்வியின் மூலம் சென்னை அணி பிளே ஆப் செல்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web