யாருக்கு வெற்றி? தீவிர பலப்பரீட்சை: பஞ்சாப் மற்றும் ஹைதராபாத்!

இன்று மாலை 3:30 மணிக்கு பஞ்சாப் அணி ஐதராபாத் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது!
 
யாருக்கு வெற்றி? தீவிர பலப்பரீட்சை: பஞ்சாப் மற்றும் ஹைதராபாத்!

கிரிக்கெட் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான காலம் என்றால் அவர்கள் கூறுவது  கோடை காலம் மட்டுமே. ஏனென்றால் இந்த கோடைகாலம் தொடங்கினால் கிரிக்கெட் திருவிழா ஐபிஎல் திருவிழாவும் தொடங்கிவிடும். இதனால் அவர்கள் தங்கள் வேலைகளை மிகவும் வேகமாக முடித்து விட்டு வீட்டிற்கு வந்து ஐபிஎல் கண்டு மகிழ்வர். ஆயிரம் ஒருசிலர் மைதானங்களில் சென்று வீரர்களை உற்சாகப் படுத்தி கண்டு மகிழ்கிறார். ஆனால் இந்த ஆண்டு பார்வையாளர்களுக்கு மைதானத்தில் அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது. 

ipl

மேலும் இந்த ஆண்டு இந்த ஐபிஎல் திருவிழாவான கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. பல தினங்களாக ஐபிஎல் திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் பல அணிகள் களமிறங்கியுள்ளனர். குறிப்பாக நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றைய தினம் படுதோல்வியடைந்தது. மேலும் இன்றைய தினம் மாலையில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் மாலை 3:30 மணிக்கு இந்தப் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்ளவுள்ளது.

ஹைதராபாத் அணி வெற்றியை கூட பதிவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பஞ்சாப் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியை கண்டுள்ளது. மேலும் ஐதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் வார்னர் உள்ளார். பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய வீரர் கேஎல் ராகுல் உள்ளார். மேலும் இவ்விரு அணிகளும் அதிரடி பேட்டிங் வரிசையை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பஞ்சாப் அணியில் சிக்சர் மன்னன் கெய்ல் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய தினம் இந்த போட்டியில் சிக்சர்களுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web