அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு கேப்டன் யார்? சி.இ.ஓ பேட்டி!

 

ஐபிஎல் போட்டி தொடங்கியதிலிருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருபவர் தல தோனி என்பது தெரிந்ததே. எந்த ஒரு அணியிலும் ஒரே கேப்டன் இருந்ததில்லை என்ற நிலையில் சிஎஸ்கே அணியில் மட்டுமே தோனி தொடர்ச்சியாக அனித்து தொடர்களிலும் கேப்டனாக இருந்து வருகிறார்

அதுமட்டுமின்றி தோனியின் அபாரமான கேப்டன்ஷிப் காரணமாக மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்று தந்துள்ளார். மேலும் நான்கு முறை இறுதிப்போட்டி வரையிலும் அணியை கொண்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனியின் கேப்டன்சி மற்றும் அவரது ஆட்டம் கேள்விக்குரிய அளவில் உள்ளது. முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது 

இருப்பினும் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும்பாலானோர் தோனிதான் கேப்டனாக தொடர வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் மட்டும் தோனி இளைஞர்களுக்கு வழிவிட்டு அணியிலிருந்து விலக வேண்டும் என்று கூறி வருகின்றனர் 

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசிவிசுவநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி தலைமை தாங்குவார் என உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அடுத்த ஆண்டும் தோனிதான் சிஎஸ்கே அணியின் கேப்டன் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது

From around the web